news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரே தட்டில் சாப்பிட்ட இந்து, முஸ்லீம்
tv

Also Watch

tv

Read this

ஒரே தட்டில் சாப்பிட்ட இந்து, முஸ்லீம்

நாகப்பட்டினம்

23

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
durga main

கூத்தூர் தர்கா ஷரீபில் 200 ஆண்டுகளுக்கு மேலாக நடைப்பெறும் ஆபத்து சோறு என்றும் கறி சோறு வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நாள் முழுதும் சாதி, மத பாகுபாடின்றி மதநல்லிணக்கத்துடன் ஒரே தட்டில் இந்து, முஸ்லீம் பொதுமக்கள் ஒன்றாக சாப்பிட்ட நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தர்காக்களால் ஏற்பட்ட நம்பிக்கை
கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் குருக்கத்தி பிரதான சாலையில் பழமை வாய்ந்த பீர்காயபு ஒலியுல்லாஹ், சித்திக் முகம்மது ஷகீது ஒலியுல்லாஹ், ஜெர்மன் பீவி அம்மா ஒலியுல்லாஹ் ஆகியோரின் தர்ஹாக்கள் அமைந்துள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பு காலரா பெரு நோய் தொற்று காலத்தில் பொது மக்களை இந்த தர்காவில் தங்க வைத்து சோறு சமைத்து கொடுத்து நோயை விரட்டியதாக நம்பிக்கை உள்ளது.

நாள் முழுதும் பரிமாறப்பட்ட அசைவ விருந்து
அதை தொடர்ந்து பாரம்பரியமாக 200 ஆண்டுகளாக பொது மக்களிடம் உணவு பொருட்களை பெற்று பொது மக்களுக்கு ஆபத்து மவுலுது எனப்படும் ஆபத்து சோறு வழங்கப்பட்டு வருகிறது. ரம்ஜான் நோன்பு ஆரம்பிக்கும் முன்பு நடைப்பெற்ற இவ்விழாவில் 500 கிலோ ஆட்டுக்கறி, 500 மரக்கால் அரிசி என இரவில் ஆடுகள் வெட்டப்பட்டு கறி சோறு சமைத்து மௌலுது ஷரீப் எனபடும் பிரார்தனை நடைப்பெற்று அதிகாலை முதல் நாள் முழுவதும் அசைவ விருந்து பரிமாறப்பட்டது.

ஒரே தட்டில் உண்டு மகிழ்ந்த முஸ்லிம், இந்து பெண்கள்
இதில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சாதி, மத பாகுபாடின்றி 5,000 த்துற்கும் மேற்பட்ட பொது மக்கள் ஆபத்து சோறு என்னும் கறி சோறு சாப்பிட்டு சென்றனர். ச்பெண்களும் உணவு உண்டது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

கொரோனா தொற்று ஏற்படவில்லை...
இது குறித்து தர்கா நிர்வாகத்தினர் கூறும் போது ஆண்டு தோறும் நடைப்பெறும் ஆபத்து சோறு விழாவில் கறி சோற்றை பாத்திரங்களில் வீடுகளுக்கு கொண்டு செல்ல கூடாது என்றும் நாள் முழுதும் மக்களுக்கு கறி சோறு போடுவதாக தெரிவித்த அவர்கள் கொரோனா காலக்கட்டத்தில் இது போன்று ஆபத்து உணவு சமைத்து போட்டதால் தங்கள் கிராமங்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Link
மகா சிவராத்திரி - சதுரகிரியில் குவியும் பக்தர்கள்

மகா சிவராத்திரி - சதுரகிரியில் குவியும் பக்தர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
11 hrs 9 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved