news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையில் கால் வைக்கவே அச்சமாக இருக்கு
tv

Also Watch

சாலையில் கால் வைக்கவே அச்சமாக இருக்கு

தேனி

56

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தேனி 3

உத்தமபாளையம் 1வது வார்டு பகுதியில் சுகாதார நிலையம் உள்ள தெருவில் கழிவுநீர் கால்வாய், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிப்பதாக குமுறும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேரும் சக்தியுமாக காணப்படும் சாலை
உத்தமபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 1வது வார்டு பகுதி கருப்பசாமி கோவில் அருகே உள்ள தெருவில் சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. மேலும் துணை சுகாதார நிலையமும் அமைந்துள்ளது. இந்தத் தெரு பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவினை செல்வதற்காக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை, மேலும் சாலை வசதியும் சரிவர அமைக்கப்படவில்லை, அதேபோன்று மழை காலங்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி சேரும் சகதியமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

சாலையை அச்சத்துடன் கடக்கும் கர்ப்பிணிகள்
இதற்கிடையே உத்தமபாளையம் ஆறு வார்டுகளில் உள்ள கர்ப்பிணிகள் தங்களது தினசரி பரிசோதனை செய்வதற்காக இந்த துணை சுகாதார நிலையத்திற்கு வந்து தங்களது உடல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் மருத்துவ பரிசோதனைக்கு வரும் பெண்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தங்களது அடிப்படை தேவைகளை சரி செய்து தர வேண்டும் என அப்பாக்கு இப்போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
பட்டா கேட்டு சாகும் வரை உண்ணாவிரம்

பட்டா கேட்டு சாகும் வரை உண்ணாவிரம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 சரிவு

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved