Also Watch
Read this
By: Manigandan Raja

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தையானது தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இச்சந்தைக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் விளையக்கூடிய காய்கறிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைவு காரணமாக கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கை 85 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது
உடன்குடி மற்றும் சுத்தமல்லி பகுதிகளில் இருந்து அதிகளவில் முருங்கை விற்பனைக்கு வந்ததால் அதன் விலை பாதியாக குறைந்து இன்று ஒரு கிலோ 57 ரூபாய் வரை விலைபோனது.