Also Watch
Read this
By: Manigandan Raja

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சி அமைந்துள்ளது இந்த நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் 18 வார்டு பகுதியில் உள்ள இந்நிலையில் நரசிங்கபுரம் நகராட்சி அருகாமையில் உள்ள 11 வது வார்டு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் சாக்கடை கழிவுநீர் செல்ல அமைக்கப்பட்ட கால்வாய் முறையாக கழிவுநீர் வெளியே செல்லாதவாறு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது இதனால் அப்பகுதி மக்கள் கடந்த ஒரு வருட காலமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முறையாக வெளியே செல்ல முடியாத நிலையில் மழைக்காலங்களில் கழுவு நீர் சாலையில் செல்வதால் அப்பகுதியில் பொதுமக்கள் அவ்வழியாக நடந்து செல்லும் போது தூர்நாற்றம் விசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும்.

பலமுறை இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இப்பகுதியில் செயல்பட்டு வருவதால் 500க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பொதுமக்கள் இந்தச் சாலையில் கடந்து செல்வதால் தேங்கி நிற்கும் கழிவு நீரால் மிகுந்த சிரமத்திற்கு
உள்ளாகி வருவதாகவும் பள்ளி குழந்தைகள் நடந்து செல்ல முடியாமல்.
குப்பை மேட்டின் வழியாக நடந்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிவுநீர் செல்ல தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் இப்பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.