Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்கூட்டம் நடைபெறும் இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை கையால் எழுதி அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் ஆன்லைன் மூலமாக இ- ஒப்புகை சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
இதன் மூலமாக மனுதாரர்கள் அளிக்கும் மனுக்களின் விவரங்களை ஆன்லைன் மூலமாக கணினியில் பதிவேற்ற பின்பாக கணினி அடையாள எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுவருகிறது.
இதனையடுத்து ஆன்லைன் ஒப்புகை சீட்டுடன் தங்களது மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் மனுதாரர்கள் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஆன்லைன் மூலமாக மனு அளிக்கும் நடைமுறை தொடங்கியபோது கடும் நெருக்கடி ஏற்பட்டது இதையடுத்து இந்த வாரம் முதல் மனு அளிக்கவரும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனி தனி வரிசை உருவாக்கப்பட்டு அவர்களுக்கு இ- ஒப்புகை சீட்டுகள் வழங்கப்படுகிறது. இதற்காக பிரத்யேக அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு கூடுதல் பணியாளர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக மனுதாரர்கள் உடனுக்குடன் தங்களது மனுக்களை பதிவுசெய்து இ- ஒப்புகை சீட்டை பெற்றுசெல்கின்றனர். பின்னர் இ- ஒப்புகை சீட்டுடன் மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய பின்னர் மனு மீதான நடவடிக்கைகள் குறித்து குறுஞ்செய்தி அனுப்பபடவுள்ளது.
மேலும் இ- மனுக்கள் மூலமாக மனுதாரர் மீதான மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து உயர் அதிகாரிகளும் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.