Also Watch
Read this
By: Manigandan Raja

மேகதாது விவகாரத்தில் திமுக பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தியதாகவும், அரசியல் கூடாது முழுமையான ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதால் தான் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்ததாகவும் திமுக கொறடா எ.வ.வேலு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர் மேகதாது தீர்மானம் சரியானது என்றும், புதிய நடுவர் மன்றம் என்பது சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு என்றும் தெரிவித்தார். மேலும், அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.