Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் போலீஸ் விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அஜித்குமார் குடும்பத்தினருக்கு என்ன உதவி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யும் உத்தரவு குறித்த விசாரணை நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளாட் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
ஏழரை லட்சம் ரூபாய், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டதாக அரசு தரப்பி தெரிவித்ததையடுத்து, மேற்கண்ட உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் எனக்கூறி ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved