news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விசாரணை கைதி மரண வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம்
tv

Also Watch

tv

Read this

விசாரணை கைதி மரண வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம்

கைதி மரண வழக்கு

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu police inquiry death

மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்து வந்த இளைஞர் மரண வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மதுரை மானகிரி செல்வகுமார் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:
மதுரை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தினேஷ் குமாரை, போலீசார் வழக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர் இந்நிலையில், அண்ணாநகர் பகுதியில் உள்ள கண்மாயில் தினேஷ் சடலமாக மீட்கப்பட்டார்.
தினேஷ் குமாரை அடித்துக் கொன்றதாக, உறவினர்கள் குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும், காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும், இந்த வழக்கை மனித உரிமை ஆணையம் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கு, சிபிசிஐடி புலனாய்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது. இறந்து போன இளைஞர் தினேஷ் குமார் உடல், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் வழங்க வேண்டும்" எனக்கூறி, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
6 hrs 46 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved