Also Watch
Read this
By: Web Team

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, விருத்தாசலத்தில், மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 30ஆவது வார்டில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆலமரத்து திரௌபதி அம்மன் கோயிலில் தொடங்கி மேட்டுகாலனி புறவழி சாலை வரை வார்டு முழுவதும் மௌன அஞ்சலி ஊர்வலம் சென்றனர். காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ரஞ்சித் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட பலரும் இந்த மௌன அஞ்சலி அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved