news-tamil-logo

3/14/2026, 11:02:17 PM

news-tamil-logo
more
Home districtnews மதுரையில் அய்யனார் கோவில் மாசி களரி திருவிழா
tv

Also Watch

tv

Read this

மதுரையில் அய்யனார் கோவில் மாசி களரி திருவிழா

மதுரை

Posted on: Feb 27, 2026 09:14 AM

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu vIRUNDHU

கோவில் மாசி களரி திருவிழா :

மதுரை மாடக்குளம் பகுதியில் கடந்த 17ஆம் தேதி தொடங்கி மாசி களரி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வந்தது சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த மாசி களரி திருவிழாவை தற்போதைய இளைஞர்கள் முன்னெடுத்து இந்த திருவிழாவை மீண்டும் நடத்தினர்.

அருள்மிகு ஈடாடி அய்யனார் கோவில் பங்காளிகள் சார்பாக நடைபெற்ற இந்த களரி திருவிழா 17 ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும் வெகு விமர்சியாக நடைபெற்று வந்தது சாமியாடிகள் ஊர்வலமாக சோணை கோவிலில் இருந்து அய்யனார் கோவில் சென்று வந்து ஒவ்வொரு நாளும் பக்தர்களுக்கு சோணை கோவில் திடலில் , சாமி ஆடிய பிறகு பக்தர்களுக்கு அருள் ஆசி வவழங்கி வந்தனர்.

இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்வாக நேற்றைய தினம் பிரபல தொழிலதிபர் வி கே டி உதயகுமார் தலைமையில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது

மாடக்குளம் கிராமத்து குடும்பமாகிய தொழிலதிபர் உதயகுமார் அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது தொடர்ந்து சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார் அதனைத் தொடர்ந்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

சுமார் 2000 நபர்களுக்கான அன்னதானத்தை பிரபல மனப்பட்டி செல்வம் குழுவினர் தயார் செய்தனர் இரவு முதலாகவே அசைவ உணவிற்கு தேவைப்படக்கூடிய அனைத்து வேலைகளையும் சுமார் 50க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் மும்முரமாக தயார் செய்யும் பணியில் ஈடுபட மறுபுறம் இன்னைக்கு ஒரு புடி என்று சுவைக்க போகும் பொது மக்களுக்கு ஏதுவாக
ஆடுகளை உரித்து லாகவமாக அதை வெட்டி.

தலைக்கறி தனியாக நெஞ்சுக்கறி தனியாக ஈரல் தனியாக குடல் தனியாக இப்படியாக மதுரைக்கு உரித்த பாணியில் மட்டனில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வகைகளையும் பிரித்து சமையல் கலைஞர்களிடம் வழங்கினார்கள் பணியாளர்கள் இரவு 12 மணிக்கு மேல் தொடங்கிய ஆடு உரிக்கும் பணியில் விடிய விடிய மலை போல் இருந்த மாமிசங்களை சமையல் கலைஞர்கள் பக்தர்களும் பொதுமக்களும் ரசித்து ருசிக்கும் வண்ணம் சுவையாக தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்

இன்றைய டிஜிட்டல் உலகில் பாரம்பரிய முறைப்படி விறகடுப்பு சமையலில் சமையலுக்கு குழுவினர்கள் மெகா சைஸ் அண்டாவில் மட்டன் கிரேவி எலும்பு குழம்பு குடல் கூட்டு வெள்ளை அரிசி சாதம் இப்படியாக ஊறுகாய் ரசம் மோர் என மாசி களரி திருவிழாவின் நிறைவு நாள் அன்னதானத்திற்கு பிரம்மாண்ட அண்டாக்களில் உணவுகளை தயார் செய்தனர்.


சுமார் 30க்கும் மேற்பட்ட ஆட்டுக்கறி 2000 நபர்களுக்கு ஆன உணவு இப்படியாக மாடக்குளம் மட்டுமின்றி மாடப்புறா பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய மக்கள் காவல் பணியில் இருந்த காவலர்கள் உறவினர்கள் மாமன் மைத்துனர்கள் என ஏராளமானோர் பிற்பகலில் இருந்து மாலை வரை இந்த கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தில் பங்கு பெற்று அருளாசி பெற்றதோடு மட்டுமல்லாது அசைவ உணவை ரசித்து ருசித்து மகிழ்ந்தனர்.

Related Link
திடீரென கொட்டித்தீர்த்த மழை

திடீரென கொட்டித்தீர்த்த மழை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
7 hrs 8 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved