news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திடீரென கொட்டித்தீர்த்த மழை
tv

Also Watch

திடீரென கொட்டித்தீர்த்த மழை

தேனி

69

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THENI 3(1)

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கடந்த சில தினங்களாக தேனி மாவட்டத்தில் கடுமையான வெயில் நிலவி வருகிறது. காலை வேலையில் கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகவும் தவித்து வருகின்றனர்.


வாட்டி வதைத்த வெயில்
இந்நிலையில் இன்று கம்பம் பள்ளத்தாக்க பகுதிகளான கம்பம், கூடலூர், உத்தமபாளையம், புதுப்பட்டி, நாராயண தேவன்பட்டி, காமய கவுண்டன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்தது.

திடீரென கொட்டித்தீர்த்த மழை
மாலை வேளையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யக்கூடும் என எதிர்பார்த்த நிலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக திடீரென மழை கொட்டி தீர்த்தது. மிதமான சாரல் மழையாக துவங்கிய நிலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

வெப்பம் தணிந்து - மகிழ்ச்சி வந்தது
கடுமையான வெயில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் தவித்து வந்த சூழலில் திடீரென மழை கொட்டி தீர்த்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்க பகுதி விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் சிரமப்பட்டு வந்த சூழலில் இந்த திடீர் மழை காரணமாக விவசாய நிலங்களில் ஈரப்பதம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Link
என் அப்பன் முருகனே வந்தது போல்...

என் அப்பன் முருகனே வந்தது போல்...

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியர்கள் 300 பேர் மாயமானதை உறுதிபடுத்திய அமைச்சர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved