news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முத்து மாரியம்மன் கோவில் மாசி பங்குனி திருவிழா
tv

Also Watch

முத்து மாரியம்மன் கோவில் மாசி பங்குனி திருவிழா

காரைக்குடி, சிவகங்கை

48

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG Temple event

மாசி பங்குனி திருவிழா :

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது . இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் மாசி பங்குனி பால்குடம் திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுகளுடன் தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் மாசி பங்குனி விழாவில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தினமும் பால்குடம், அக்னி சட்டி அழகு குத்தி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர் இந்நிலையில் காரைக்குடி கழனி வாசல் வேடன் நகர் மற்றும் திருப்பத்தூர் சிவகங்கை அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.

அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்று முத்தாலம்மன் கோவிலில் நீராடி பால்குடம், அழகு குத்தி அக்னி சட்டி எடுத்து பக்தி பரவசத்துடன் நகரின் பால்குட வீதிகளில் வளம் வந்து முத்துமாரி அம்மனுக்கு கோவில் சென்று தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காப்பு கட்டி விரதம் இருந்த நரிக்குறவர் பக்தர் ஒருவர் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் அழகு குத்தி முதுகில் குத்தப்பட்ட ஊசியில் தொங்கியபடி பறவை எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்ற போது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அழகு குத்தி பால்குடம் தலையில் சுமந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் காவடியுடன் ஆட்டம் ஆடி சென்றது பொது மக்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Link
காவல்துறையை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்

காவல்துறையை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சரவை மாற்றத்தில் யாருக்கு ஜாக்பாட்?

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved