Also Watch
Read this
By: Manigandan Raja

தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர் :
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள வத்தல் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாது சக்தி தம்பதியினருக்கு மேகநாதன் வெள்ளியங்கிரி முத்துலட்சுமி என்ற 3 பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பரமசிவம் என்பவரிடமிருந்து 8 சென்ட் நிலம் வாங்கி உள்ளனர். இந்த இடத்தில் இவர்கள் கொட்டகை அமைத்து குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி பரமசிவத்தின் மருமகன் சாமி கண்ணு என்பவர் அடியாட்களுடன் வந்து மாது மற்றும் அவரது குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்களது நிலத்தை எங்களுக்கு கொடுக்கும்படி கடுமையாக தாக்கியுள்ளனர்.
அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாதுவின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஒன்றிணைந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு திடிரென தர்ணாவில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் சதீஷ் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் அப்போது பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved