news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாலன் இல்லத்தில் நல்லகண்ணு உடல் அஞ்சலிக்கு வைப்பு
tv

Also Watch

tv

Read this

பாலன் இல்லத்தில் நல்லகண்ணு உடல் அஞ்சலிக்கு வைப்பு

மருத்துவக் கல்லூரிக்கு நல்லகண்ணு உடல் கொடையளிப்பு

30

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடல், மருத்துவ ஆய்வுக்காக சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடை அளிக்கப்படுவதாக இ.கம்யூ. கட்சி தெரிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு
பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மதியம் பிப்ரவரி 26ஆம் தேதி, காலமானார். இதையடுத்து, அவரது உடல் தியாகராய நகரிலுள்ள கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், த.வெ.க. தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி சீமான், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து, நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Link

"காற்றில் கரைந்த கறைபடியா கரங்கள்"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
11 hrs 9 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved