Also Watch
Read this
By: Manigandan Raja

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் அமுதா ஞானசேகரன் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
கொடியேற்றிவிட்டு கொடிப் பாடல் பாடிக்கொண்டிருந்த சமயத்தில், தேசியக் கொடி தலைகீழாகப் பறப்பதைப் பார்வையாளர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் கவனித்து சுட்டிக்காட்டினர்.
உடனடியாகத் தேசியக் கொடி கீழே இறக்கப்பட்டு, கயிறு மாற்றி அமைக்கப்பட்ட பின் மீண்டும் முறைப்படி ஏற்றப்பட்டது. சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை அஜாக்கிரதையாகத் தலைகீழாக ஏற்றப்பட்ட இச்சம்பவம், அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved