Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மேற்கூரை இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இருப்பினும், வகுப்பறையில் இருந்த எல்.இ.டி. டிவி, சேர் சேதமடைந்தன.
இந்நிலையில், வகுப்பறை கட்டடத்தின் உறுதித்தன்மை மற்றும் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தினால் மட்டுமே,
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதாக கூறி, பெற்றோர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved