Also Watch
Read this
By: Web Team

இந்துத்துவ அமைப்பினரின் போராட்டத்தால் இரவு களேபரமாக காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் இயல்பு நிலை திரும்பியதையடுத்து வழக்கம் போல் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றாமல் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டதை கண்டித்து இந்துத்துவ அமைப்பினர் நடத்திய போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved