Also Watch
Read this
By: Web Team

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், அதில் வந்த இருவரில் ஒருவர் உயிரிழந்தார்.
திருக்கடையூரில் இருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த வேன், அனந்தமங்கலம் மெயின் ரோட்டில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி யு டர்ன் அடித்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
பைக்கை ஓட்டி வந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பின் சீட்டில் அமர்ந்து வந்த காபீரியல் படுகாயமடைந்தார். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து வரும் பொறையார் போலீசார், தப்பி ஓடிய வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved