news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு, முதல்வர் விஜய் பங்கேற்பு
tv

Also Watch

tv

Read this

பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு, முதல்வர் விஜய் பங்கேற்பு

பிரம்மாண்டமான ஏற்பாடுகள்

26

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முதல்முறையாக, சட்டமன்ற தேர்தலிலேயே வெற்றியை வாரிக்கொடுத்த பெரம்பூர் தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார் சர்மா நகர் 1ஆவது பிரதான சாலையில் அமைந்துள்ள அலுவலக திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு உள்ளது.

பெரம்பூர் மக்களுக்காக பிரத்யேக செயலி
பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலியை முதல்வரும், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவுமான விஜய் அறிமுகம் செய்து வைக்கிறார். பெரம்பூர் தொகுதி மக்களின் குரலை நேரடியாக மக்களாட்சியின் நிர்வாகத்துடன் இணைக்கும் முயற்சியாக இந்த செயலி உருவாக்கப் பட்டுள்ளது.

புதிய ரேஷன் கார்டுகளை வழங்கும் முதல்வர் விஜய்
பெரம்பூரில் உள்ள நியாயவிலைக் கடையில் பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டுகளை முதலமைச்சர் விஜய் வழங்குகிறார். மாநகராட்சி மின்சாரப் பேருந்து சார்ஜிங் மையத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.

பெரம்பூருக்கு முதல்வர் வருகை - பாதுகாப்பு
முதலமைச்சர் விஜய் வருகையை ஒட்டி பெரம்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சர்மா நகர் ஒன்றாவது தெரு முதல் நியாய விலைக் கடை அமைந்துள்ள 10ஆவது தெரு வரை, வீடுகள் கடைகள் முன்பு இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.


Related Link
திமுக, தவெக இணைவை ஏற்க முடியாது - துரை வைகோ உறுதி

திமுக, தவெக இணைவை ஏற்க முடியாது - துரை வைகோ உறுதி

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாகிஸ்தானை சேர்ந்த தாய், மகன் கைது

0
7 mins agoshare
கர்நாடகா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau