Also Watch
Read this
By: Manigandan Raja

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் ஏகனாபுரம் கிராம மக்கள் 1100 நாட்களுக்கும் மேலாக விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டம் நடத்தி வந்த கிராம மக்களுக்கு ஆதரவாக தவெக தலைவர் விஜய் போராட்டக் களத்திற்கு நேரடியாக வந்து ஆதரவு தெரிவித்து தான் ஆட்சிக்கு வந்தால் பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை செயல்பட விட மாட்டேன் என உறுதி அளித்திருந்தார்.
அந்த வகையில் தற்பொழுது தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சி வெற்றி பெற்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு
அரசு பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைத்து உள்ளது.
பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அறிந்து ஏகனாபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் 80வது சுதந்திர தின விழா வை முன்னிட்டு ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை நிறுத்தி வைத்துள்ள தமிழக அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்.
மேலும் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள சாலைக்கு தளபதி விஜய் சாலை என பெயர் வைத்தும் ஏகனாபுரம் கிராம மக்கள் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved