news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிரமமின்றி சாமி கும்பிடுங்க மக்களே!!!
tv

Also Watch

சிரமமின்றி சாமி கும்பிடுங்க மக்களே!!!

மதுரை

14

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MDU 1(3)

மேலூர் அருகே அழகர்கோயில் ஶ்ரீகள்ளழகர் கோயிலில் வெயில் காலத்தில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் சார்பில் 1000 அடி தேங்காய் நார் விரிக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள்
மேலூர் அருகே புகழ்பெற்ற வைணவ திருத்தலமாக விளங்கக்கூடிய ஶ்ரீகள்ளழகர் திருக்கோவிலில், வெயில் காலத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதால், கோயில் வளாகத்தில் தரை வெப்பம் அதிகரித்து பக்தர்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படும் சூழல் காணப்படுகிறது.

சிரமமின்றி பக்தர்கள் வழிபாடு
இதனை கருத்தில் கொண்டு, கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் இணைந்து கோயில் உட்புற வளாகத்தில் சுமார் 1,000 அடி நீளத்தில் தேங்காய் நார் தரை விரிப்புகளை அமைத்துள்ளனர். இந்த ஏற்பாட்டின் மூலம் வெயிலின் தாக்கத்தால் பாதிக்காமல் பக்தர்கள் சுலபமாகவும், பாதுகாப்பாகவும் நடந்து சென்று சாமி தரிசனம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு
பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு செய்யப்பட்ட இந்த முயற்சியை பக்தர்கள் பெரிதும் வரவேற்று வரும் நிலையில், வெயில் காலத்தில் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இது பெரும் உதவியாக இருப்பதால் மேலும் சில ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
கண்கலங்கிய தொண்டரை தேற்றிய வைகோ...

கண்கலங்கிய தொண்டரை தேற்றிய வைகோ...


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜெம் வீரமணி வழக்கில், செட்டில்மெண்ட் மன்னன் கணேசன்

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved