Also Watch
Read this
By: Fyrose Banu

வியாசர்பாடி பள்ளர்தெருவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பழம்பெரும் நிர்வாகி முன்னேற்றம் என்பவர் உடல் நலம் குன்றி அவதிப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. இதனை அடுத்து இந்த தகவல் ஆனது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தெரிவிக்கப்பட்டது
உடல்நலம் குன்றிய மூத்த நிர்வாகியை சந்தித்து ஆறுதல்
இதனை அடுத்து சென்னை வியாசர்பாடி பள்ளத் தெருவில் அமைந்துள்ள முன்னேற்றம் அவர்களுடைய வீட்டிற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேரடியாக சென்று உடல் நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வரும் முன்னேற்றத்தை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.
வைகோவை கண்டதும் கண்ணீர் சிந்திய நிர்வாகி
வைகோவை கண்டவுடன் தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னேற்றம் கண்ணீர் சிந்திய நிலையில் அவரை கரை தேற்றி கவலை கொள்ளாதீர்கள் நான் உங்களோடு தான் இருக்கின்றேன் மீண்டும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் பெரும் எழுச்சியோடு இந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் என்றும் வைகோ விழுந்து விட்டான் வைகோ இதோடு அவ்வளவு தான் என சொன்னவர்களுக்கு மீண்டும் தன்னுடைய என்னுடைய நடை பயணத்தின் மூலம் அவர்களுக்கு ஒரு பதிலடி தந்திருக்கின்றேன் கண்ணீர் விட்டு அழாதீர்கள் என அவரை கரை தேற்றினார். 
ஆறுதல் கூறி தேற்றிய வைகோ
மேலும் தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னேற்றம் அவர்கள் கண்ணீர் விட்டு அழுத பொழுது அவரது குடும்பத்தினர் அவரை ஆறுதல் படுத்திய போது அதன் குறிப்பிட்ட வைகோ அவரை கட்டுப்படுத்தாதீர்கள் அவர் கண்ணீர் விட்டு அழட்டும் அப்பொழுதுதான் மனதில் உள்ள பாரங்கள் அனைத்தும் குறையும் கண்ணீரை கட்டுப்படுத்தினால் அது மேலும் மேலும் மனதில் பாரத்தை மேம்படுத்தும் எனவே கண்ணீரை கட்டுப்படுத்தாதீர்கள் அது கரை புரண்டு ஓடட்டும் என நெகிழ்ச்சியோடு அந்த நிர்வாகிக்கு ஆறுதல் கூறியது அங்கு இருந்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இதனை தொடர்ந்து மதிமுக தொண்டர்கள் தங்களது தலைவரின் இந்த ஆறுதல் பேச்சைக் கேட்டு நிறைந்து போனார்கள். இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட முன்னேற்றம் மற்றும் அவர்களுடைய குடும்பத்திலிருந்து ஒரு வித ஆறுதலை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved