news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நிலத்தகராறில் ராணுவ குடும்பத்தினர் தாக்கப்படும் காட்சி
tv

Also Watch

tv

Read this

நிலத்தகராறில் ராணுவ குடும்பத்தினர் தாக்கப்படும் காட்சி

ரெட்டியூர், திருப்பத்தூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருப்பத்தூர் நிலத்தகராறு

ராணுவ குடும்பத்தினர் தாக்கப்படும் காட்சி : 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பெரிய பொன்னேரி பகுதியை சேர்ந்த குமார் (சுபேதார்) ராணுவத்தில் பெங்களூரில் பணியாற்றி வருகிறார் இவர் ரெட்டியூர் பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டில் குமாரின் மனைவி சிவசக்தி மற்றும் பிள்ளைகள் திவ்யா மற்றும் தருன் ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இவரின் அரை அடி இடத்தை அருகில் உள்ள சிவராமன் என்பவர் சேர்த்து கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரது குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகாரின் பேரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சிவராமன் குடும்பத்தினர் குமார் குடும்பத்தினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி உள்ளனர். அதே போன்று நேற்று காலை சிவ சக்தியின் தாயார் தெய்வானை வீட்டில் இருந்தபோது கோலம் போடும் தகராறில் மூதாட்டியை தாக்கி உள்ளனர்.

தேவனை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதே போன்று மாலை நேரத்தில் சிவசக்தியின் தந்தையான மேகநாதன் (65) மற்றும்
சிவசக்தி அவரின் பிள்ளைகள் என அனைவரையும் சிவராமன் குடும்பத்தினர் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

சிறு குழந்தைகள் என்றும் பாராமல் சிவராமன் குடும்பத்தினரில் ஒருவர் டூ வீலர் வண்டியை ஏற்றி கொலை செய்யவும் முயற்சி செய்தார் பின்னர் இந்த சிறுமியை கண்ணம் மற்றும் வாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்கினர்.

இதனால் நிலைகுலைந்த சிவசக்தி குடும்பத்தினர் செய்வது அறியாமல் திகைத்தனர். அதற்குள் குமார் குடும்பத்தினரை சிவராமன் குடும்பத்தினர் தாக்கி அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றனர். பின்னர் அடி வாங்கிய சிவசக்தி குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து அதன் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் சிவ சக்தி தனது பெண்ணை சிவராமன் குடும்பத்தினர் தகாத இடங்களில் கை வைத்து தாக்கியதாகவும் மேலும் காலையிலே அடிதடி பிரச்சினை நடக்கும்போது போலீசார் உரிய நடவடிக்கை
எடுத்திருந்தால் இதுபோல் திரும்பவும் தகராறு ஏற்பட்டிருக்காது எனவே போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகின்றனர் எனவும் சிவசக்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

மேலும் ஒரு ஆர்மி குடும்பத்தினரை மற்றொரு ஆர்மி குடும்பத்தினர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related Link
போன வருஷம் புரளியை கிளப்பி விட்டுட்டாங்க! இந்த வருஷம் பரவாயில்லை!

போன வருஷம் புரளியை கிளப்பி விட்டுட்டாங்க! இந்த வருஷம் பரவாயில்லை!

                   
               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானுக்கு எதிரான போர் செலவு: அமெரிக்கா குறைத்து கூறுகிறது

0
4 mins agoshare
Iran-1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved