news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று சாதனை படைக்க விருப்பம்
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று சாதனை படைக்க விருப்பம்

கேஎல்.ராகுல்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KL Rahul

தோனியின் சாதனையை சமன் செய்ய விரும்புகிறேன் :

எம்.எஸ். தோனி ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்ற சாதனையை சமன் செய்வதுதான் தனக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தரும் எனவும், அதையே தான் செய்ய விரும்புகிறேன் என கேஎல்.ராகுல் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ”ஒவ்வொரு சீசனிலும், தான் எந்த அணிக்காக விளையாடினாலும், ஐபிஎல் கோப்பையை வெல்வதற்காக சிறந்த முயற்சியைக் கொடுக்கிறேன் எனவும், அது தான் தனக்கு முக்கியமானது என கூறியுள்ளார்.

அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஜோடி  :

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரில் தாய்வான் ஜோடியை வீழ்த்தி இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. டென்மார்க்கில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, தாய்வானின் சியூ சியாங் சியே- வாங் சி-லின் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 23க்கு 21, 19க்கு 21, 21க்கு 12 என வெற்றி பெற்றது.

கோவா அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி :

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவா அணியை வீழ்த்தி 2க்கு 0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றது. ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் ரெய் தசிக்கவா ஆட்டத்தின் 82-வது நிமிடத்திலும், மதிஹ் தலால் 96-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

கடைசி வரை போராடிய கோவா அணியால் எந்த கோலும் அடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 2க்கு 0 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தோனி தற்போது முழு வேகத்துடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் :

நட்சத்திர வீரர் தோனி தற்போது முழு வேகத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் பழைய ஃபார்மில் இருப்பதாகவும் சென்னை அணியின் பயிற்சியாளர் ஹசி தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், கடந்த சில போட்டிகளில் இம்பேக்ட் பிளேயர் விதியைச் சோதித்துப் பார்த்ததில் சில சவால்கள் இருந்ததாகவும், வரும் போட்டிகளில் சில மாற்றங்களுடன் சிஎஸ்கே களமிறங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தோனி இன்று விளையாடுவாரா..? இல்லையா..? என்பது தனக்கு தெரியாது எனவும், அவரது வருகை அணிக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும் என கூறினார்.

ஐபிஎஸ் டிக்கெட் வைத்து பேருந்தில் இலவசமாக பயணம் :

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், போட்டியை காணவரும் பார்வையாளர்கள், தங்களது IPL கிரிக்கெட் போட்டிக்கானநுழைவுச் சீட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பார்வையாளர்கள் வசதிக்காக போட்டி முடிந்த பின்பு தமது இருப்பிடம் செல்ல, அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம், தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிறுத்தம், சென்னை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம், ஓமந்தூரார் மருத்துவமனைஆகிய இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Link
பாகிஸ்தான் கிரிக்கெட் நிபுணர் நவுமன் நியாஸ் சந்தேகம்

பாகிஸ்தான் கிரிக்கெட் நிபுணர் நவுமன் நியாஸ் சந்தேகம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
27 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved