news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பாகிஸ்தான் கிரிக்கெட் நிபுணர் நவுமன் நியாஸ் சந்தேகம்
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தான் கிரிக்கெட் நிபுணர் நவுமன் நியாஸ் சந்தேகம்

நவுமன் நியாஸ்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சூரியவன்ஷி

வைபவ் சூரியவன்ஷி பேட்டில் ‘ஏஐ சிப்’ பயன்படுத்தினாரா...? 

கிரிக்கெட்டில் அதிரடி காட்டி வரும் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி பேட்டில் ‘ஏஐ சிப்’ பயன்படுத்துவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் நிபுணர் நவுமன் நியாஸ் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிப்பை கடவுள் தான் தனது பேட்டில் இணைத்துள்ளதாக சூரியவன்ஷி பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த சின்னபையன் அடிக்கிற அடி, சாதாரண மனிதனின் அடி போன்றே தெரியவில்லை எனவும், ஒரு வேளை அவரது பேட்டில் செயற்கை நுண்ணறிவு சிப்பை பொருத்தி, அதன் மூலமே இத்தகைய சக்தி வாய்ந்த ஷாட்டுகளை அடிக்கிறாரோ என்று கூட சந்தேகமாக உள்ளது என வுமன் நியாஸ் கூறியிருந்தார்.

ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை :

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் சுற்றின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஜெய்பூரில் மாலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் தொடர் தோல்விகளில் இருந்து மீள டெல்லி கேப்பிட்டல் அணியும், புள்ளி பட்டியலில் முதல் இடத்தை நோக்கி நகர ராஜஸ்தான் அணியும் முனைப்பு காட்டுவதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

உக்ரைனை வீழ்த்தி இந்திய அணி 2வது வெற்றி பெற்று அசத்தல் :

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 2வது முறையாக வெற்றி பெற்று அசத்தியுள்ளது. லண்டனில் நடைபெற்ற போட்டியில், 6-வது பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய பெண்கள் அணி நேற்று பலம் வாய்ந்த உக்ரைனுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 3 க்கு 2 என்ற கணக்கில் உக்ரைனை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி :

சமோவாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் ஜூனியர் மற்றும் சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை பெல்லானா ஹரிகா 197 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார். தரங்கினி, பூமிகா ஆகியோர் 63 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினர். இதன் மூலம் இந்திய அணிக்கு 6 தங்க பதக்கம் கிட்டியுள்ளது.

பெங்களுரு அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி :

ஐபிஎல் தொடரின் 42-வது லீக் போட்டியில் பெங்களுரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. அகமதபாத்தில் “‘ நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களுரு அணி, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்களை எடுத்தது.

இதனால் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 15 புள்ளி 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

Related Link
துனிசியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று அசத்தல்

துனிசியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று அசத்தல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
1 hr 17 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved