Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடியில் புதிய தொழில் பூங்கா அமைப்பதற்காக சிப்காட் நிறுவனம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
அல்லிக்குளம், ராமசாமிபுரம், கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டப்பாறை உமரிக்கோட்டை, பேரூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் ஆயிரத்து 967 ஏக்கரில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
667 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த தொழிற்பூங்கா மூலம் 17 ஆயிரத்து 200 பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved