கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா புழக்கம். மாணவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் மூலம் சிக்கிய கேரள கும்பல். கேரள கும்பல் மூலம் சிக்கிய சாமியார். கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதையாக கஞ்சா கும்பலை பிடிக்க இறங்கிய காக்கிகள் கையில் சிக்கிய ஒரு கொலை குற்றவாளி. சாமியார் வேடத்தில் சுற்றிக் கொண்டிருந்த குற்றவாளி யார்? அவர் யாரை கொலை செய்தான்? எதற்காக கொலை செய்தான்? பின்னணி என்ன?ஒரு சாமியார் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவல்காலேஜ்க்கு வர்ற மாணவர்களுக்கு கஞ்சா ஈசியா கிடைக்கிறதாகவும் அத கட்டுப்படுத்தலனா மாணவர்களோட எதிர்காலமே கேள்விக்குறியாகிரும்னும் மாவட்ட எஸ்.பி.க்கு பேராசிரியர்கள் கம்ப்ளைண்ட் பண்ணிருக்காங்க. அதுக்குப்பிறகு கல்லூரிக்கே நேர்ல வந்த காவல்துறையினர் மாணவர்கள்கிட்ட விசாரிச்சிருக்காங்க. அப்போ, வேளாங்கண்ணி லாட்ஜ்ல சிலர் இருக்குறதாகவும், அவங்கதான் கஞ்சா சப்ளை பண்றதாகவும் சொல்லிருக்காங்க மாணவர்கள். அடுத்து, அந்த லாட்ஜ்க்கு போன போலீசார் அங்க பல நாளா தங்கி இருந்த ஒரு கும்பலை பிடிச்சி தங்களோட பாணியில விசாரிச்சிருக்காங்க. அப்போ, கேரளாவுல உள்ள ஒரு கும்பல்தான் தங்களுக்கு கஞ்சா சப்ளை பண்றதா சொல்லிருக்காங்க லாட்ஜ்ல இருந்த கும்பல். அதுக்குப்பிறகு, கேரளாவுல உள்ள அந்த கும்பல பிடிச்சி விசாரிச்சப்ப ஒரு சாமியார்தான் எங்களோட கஞ்சா விற்பனை குருவே, அவரு இல்லாம எங்க பிசினஸே இல்லனு சொல்லிருக்காங்க. அடுத்து, கேரளா கும்பல் உதவியோட அந்த சாமியாரை சுத்தி வளைச்சி பிடிச்சி விசாரிச்சப்பதான் இது வெறும் கஞ்சா விற்பனை வழக்கு மட்டுமில்ல, நாலு வருஷத்துக்கு முன்னால நடந்த ஒரு கொலை வழக்கையே முடிவுக்கு கொண்டு வரப்போகுது அப்டிங்குறது தெரியவந்துச்சு. Related Link நடுஇரவில் சுடுகாட்டில் நடந்தது என்ன? மகேஷ்வரன்-ரமேஷ் இருவருக்கும் இருந்த தொழில் போட்டிநாகை, வேளாங்கண்ணி தெற்குப் பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அப்பானு என்ற மகேஷ்வரன். பரவை காய்கறி சந்தையை யார் நிர்வகிக்கிறதுங்குற தொழில் போட்டி மகேஷ்வரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேசுக்கும் இருந்துருக்குது. ரெண்டுதரப்பை சேர்ந்தவங்களும் மாறி மாறி சண்டை போடுறது, பிரச்சனை பண்றதுனு இருந்ததால பிரச்சனை தீரவே இல்ல. அதனால ஆத்திரமடைஞ்ச ரமேஷ் டீம் மகேஷ்வரன் கதைய முடிக்க திட்டம் போட்ருக்காங்க. ஆனா, அந்த வலையில மகேஷ்வரன் சிக்காததால அவரோட தம்பி மனோகரனை 2022-ம் ஆண்டு அரிவாளால வெட்டி கொலை செஞ்சிருக்காங்க. பைனான்சியர் மனோகர் தன்னோட அலுவலகத்துல நண்பர் மணிவேல்கூட உக்காந்து பணம் எண்ணிட்டு இருக்கப்ப, உள்ள புகுந்த ஒரு கும்பல் கொடூரமா வெட்டி கொன்னுருக்காங்க. அத தடுக்க முயற்சி செஞ்ச மணிவேலுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துருக்குது. இது சம்மந்தமா வழக்குப்பதிவு செஞ்ச போலீசார் பைனான்சியர் மனோகரோட அலுவலகத்துல இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு பண்ணி, அதவச்சி குற்றவாளிகள் எல்லாரையும் கூண்டோட கைது பண்ணிட்டாங்க. ஆனா, கிரேட்டன் என்ற ரோசரிகிரேட்டன்ங்குற ஒரு குற்றவாளிய மட்டும் பிடிக்க முடியல. நாலுவருஷம் எவ்வளவோ தேடிப்பாத்தும் காக்கிகள் கண்ணுல சிக்கவே இல்ல. Related Link கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் ரொமான்ஸ் கருவேலங்கடை சாலையில் கஞ்சாவுடன் சிக்கிய சாமியார்இதுக்குமத்தியிலதான், கல்லூரி மாணவர்கள்கிட்ட கஞ்சா புழக்கம் அதிகமா இருக்குறதா கம்ப்ளைண்ட் வந்து விசாரணையில இறங்கிருக்காங்க போலீசார். அப்போ மாணவர்கள், லாட்ஜ்ல உள்ள கும்பல், கேரளா கும்பல்னு அடுத்தடுத்து விசாரிச்சப்ப கடைசியா ஒரு சாமியார் சிக்கிருக்காரு. சென்னையில இருந்து தஞ்சாவூருக்கு கஞ்சா கடத்திட்டு கருவேலங்கடை மெயின் ரோட்ல வந்த அந்த சாமியார்தான் காக்கிகள் கண்ணுல சிக்காம இருந்த குற்றவாளி ரோசரிகிரேட்டன். போலீசார கண்டதும் தப்பிஓட முயற்சி பண்ணி கீழே விழுந்த ரோசரிகிரேட்டனை விரட்டி பிடிச்சி கைது பண்ணி தொடர்ந்து விசாரிச்சப்பதான் பல தில்லாலங்கடி வேலையெல்லாம் வெளிச்சத்துக்கு வந்தது.சாமியார் வேடத்தில் ஏமாற்றிய ரோசரி கிரேட்டன் கைதுமனோகரன் கொலை வழக்குல போலீஸ்ல சிக்காம இருக்க தாடி வளத்து, சாமியார் வேஷம்போட்டு சுத்துன ரோசரி கிரேட்டன், கஞ்சா கடத்தி சேல்ஸ் பண்ணிட்டு இருந்துருக்கான். அதுமட்டுமில்லாம, Club house என்ற செயலி மூலம் பெரிய டீமை உருவாக்கி அந்த டீம் மூலம் லாட்ஜ் ஓனர்கள், கடை வியாபாரிகளை மிரட்டி மாமூல் வேட்டையிலயும் ஈடுபட்ருந்துருக்கான். நடந்த அத்தனை விஷயத்தையும் ரோசரி கிரேட்டனே போலீசார்கிட்ட வாக்குமூலமா சொல்லிருக்கான். இதுஒருபக்கம் இருக்க, ரோசரி கிரேட்டனோட கஞ்சா கடத்தல்ல ஈடுபட்ட கும்பலையும் போலீசார் வலைவீசி தேடிட்டு இருக்காங்க. Related Link செப்டிங் டேங்கில் மாற்றுத்திறனாளி சடலம்