கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்த இளைஞர். உயிரிழந்த இளைஞர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் பழிக்குப்பழியாக சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்றகோணத்தில் காவல்துறையினர் விசாரணை. வழக்கில் திடீர் திருப்பமாக மண்டைஓடு பாண்டி என்ற அகோரி அரெஸ்ட். கொலை செய்யப்பட்ட இளைஞருக்கும் அகோரிக்கும் என்ன சம்மந்தம்? இளைஞரை அகோரி கொலை செய்ததற்கான காரணம் என்ன? ஜெயராமனின் கூட்டாளிகளிடம் போலீசார் விசாரணைகழுத்துல கத்தி சொறுகுனபடி நந்தகுமாருங்குற இளைஞர் உயிரிழந்து கிடந்துருக்காரு. இதப்பாத்த கிராம மக்கள் போலீசுக்கு தகவல் குடுத்துருக்காங்க. அடுத்து, அங்க வந்த போலீசார் இளைஞரோட சடலத்த மீட்டு விசாரணையில இறங்கிருக்காங்க. உயிரிழந்து கிடந்த இளைஞர்மேல கொலை உள்ளிட்ட வழக்குகள் இருக்குது. கடந்த 2018-ல முருகேசன்ங்குறவரை ஜெயராமனும் அவரோட கூட்டாளிகளும் சேர்ந்து கஞ்சா போதையில அரிவாளால வெட்டி கொலை செஞ்சிருக்காங்க. அதுக்கு, பழிக்குப்பழியா முருகேசனோட நண்பர்களான நந்தகுமார் உள்ளிட்ட சிலர் 2019-ல ஜெயராமனை வெட்டி கொலை செஞ்சாங்க. இந்த வழக்குல ஜெயிலுக்குப்போன நந்தகுமார் கொஞ்ச நாளைக்கு முன்னாலதான் விடுதலையாகிருக்காரு. இதுக்குமத்தியிலதான், இந்த கொலையும் நடந்துருக்குது. அதனால, ஜெயராமனோட கூட்டாளிகள்தான் கொலைய செஞ்சிருப்பாங்கங்குற கோணத்துல போலீசார் விசாரணைய முடுக்கி விட்ருக்காங்க. ஆனா, இது பழிக்குப்பழி நடந்த கொலையே இல்ல கஞ்சா விவகாரத்துல நடந்த கொலைனு தெரியவந்துருக்குது. அகோரி மண்டை ஓடு பாண்டியிடம் வம்பிழுத்த இளைஞர்சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பக்கத்துல உள்ள பேயன்பட்டியைச் சேர்ந்தவர் தான் 26 வயசான இளைஞர் நந்தகுமார். கூலி வேலை செஞ்சிட்டு இருந்த இளைஞர் கொலையையும் கூலிக்காக பண்ண ஆரம்பிச்சிருக்காரு. ஒருகட்டத்துல, கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர் தானாவே பலர்கிட்ட வம்பிழுத்துருக்காரு. அப்படிதான், அதே பகுதியில உள்ள 65 வயசான மண்டை ஓடு என்ற பாண்டிக்கிட்டபோய் வம்பிழுப்பாரு. இரவுநேரத்துல சுடுகாட்டுல அடிக்கடி பூஜை பண்ற அகோரி கஞ்சா புகைக்கிறது வழக்கம். அது, நந்தகுமாருக்கு நல்லாவே தெரியும். அதனால, நைட்நேரத்துல சுடுகாட்டுக்கு அகோரி மண்டை ஓடு பாண்டியை தேடி போய்ருக்காரு. பூஜை பண்ணிட்டு இருந்த அகோரிக்கிட்ட தனக்கு கஞ்சா வேணும்னு கேட்ருக்காரு இளைஞர். அதுக்கு, பூஜை பண்றநேரத்துல யாரும் வரக்கூடாது நீ வந்ததே தப்பு, தன்கிட்ட கஞ்சாவேற கேக்குறயானு ஆவேசத்தோட கோபப்பட்ருக்காரு.அகோரி மண்டை ஓடு பாண்டியை கைது செய்த போலீஸ்அகோரியோட ஆவேசத்த அசால்ட்டா எடுத்துக்கிட்ட இளைஞர், பூஜை பண்ணி ஊர ஏமாத்துற வேலை தன்கிட்ட வேண்டாம், ஊர் மக்கள் வேணா பயப்படுவாங்க, உன் பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்படமாட்டேனு சொன்னதோட கஞ்சா கேட்டு தகராறு பண்ணிருக்காரு. பூஜைநேரத்துல இடையூறு செய்றயானு கடுப்பான அகோரி மண்டை ஓடு பாண்டி தன்கிட்ட இருந்த கத்தியால இளைஞரோட கழுத்துல சொறுகிருக்காரு. அடுத்து, கழுத்துல இருந்த அந்த கத்திமேலயே ஏறி மிதிச்ச அகோரி, தன்னோட பூஜைக்கு நீதான் நரபலி உன் ரத்தம்தான் குங்குமம்னு சொல்லி உயிர்போற வரைக்கும் நின்னு ரசிச்சிக்காரு. அடுத்து, அந்த இடத்துல இருந்து சடலத்த இழுத்து வந்து ஜீவா நகர் பகுதியில போட்டுட்டு விடியுறதுக்குமுன்ன தன்னோட வீட்டுக்கு போய்ட்டாரு. மறுநாள் காலையில ஊர் மக்கள்கிட்ட விசாரிக்கிறப்ப அகோரி மட்டும் திறுதிறுன்னு முழிச்சிருக்காரு. அதனால, போலீசாரோட விசாரணை அவருபக்கம் திரும்பிருக்குது. அப்பதான் தான் கொலை செஞ்ச விஷயத்தையே சொல்லிருக்காரு அகோரி. இளைஞரை கொலை செஞ்ச அகோரி இப்ப சிறை கம்பிக்குள்ள உக்காந்து பூஜை பண்ணிட்டு இருக்காரு. Related Link கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் ரொமான்ஸ்