news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews அரபு நாடுகளிடம் இழப்பீடு கோரும் ஈரான் அரசு
tv

Also Watch

tv

Read this

அரபு நாடுகளிடம் இழப்பீடு கோரும் ஈரான் அரசு

ஈரான்

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உலக செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து :

அல்பேனிய தலைநகர் திரானாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு கட்டடம் முழுவதும் தீ பரவியது. விபத்தில் அதிக அளவிலான கரும்புகை வெளிப்பட்டதால் 13 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 80 ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.

பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த முன்னாள் மாணவர் :

துருக்கியில் பள்ளிக்குள் நுழைந்து முன்னாள் மாணவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் , மாணாக்கர்கள் 16 பேர் காயம் அடைந்த நிலையில், அவரும் தனக்கு தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவரெக் நகரில் உள்ள பள்ளியில் படித்த 18 வயதான முன்னாள் மாணவர் ஒருவர், துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்து சரமாரியாக சுட்டுள்ளார்.

அரபு நாடுகளிடம் இழப்பீடு கோரும் ஈரான் அரசு :

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலின் காரணமாக பெரும் இழப்பை சந்தித்துள்ள ஈரான், இரு நாடுகளுக்கும் ஆதரவு அளித்ததற்காக பக்ரைன், சவுதி, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளிடம் இழப்பீடு கோரியுள்ளது. ஈரான் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு 5 நாடுகளும் அவற்றின் ராணுவ தளங்களை கொடுத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு உதவியதாக கூறி ஈரான் இழப்பீடு கோரியுள்ளது.

இஸ்ரேலுடனான பாதுகாப்பு உறவு ரத்து - இத்தாலி பிரதமர் :

கடந்து ஒரு வாரமாக இஸ்ரேல்-இத்தாலி உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், இஸ்ரேலுடனான பாதுகாப்பு உறவை இத்தாலி அதிரடியாக ரத்து செய்துள்ளது. லெபனானில் உள்ள ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இத்தாலியின் வாகனப் படைகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், இத்தாலி கண்டனம் தெரிவித்திருந்தது.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகள் மீண்டும் தாக்குதல் :

தெற்கு லெனபானின் டைர் ((Tyre )) மாவட்டத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்து சாலை முழுவதும் புகை மூட்டம் ஆக்கிரமித்திருந்தது. அண்மையில் வாஷிங்டனில் இஸ்ரேல்-லெபனான் இடையே நடைபெற்ற போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைன்-நார்வே இடையே ராணுவ ஒப்பந்தம் :

பாதுகாப்பு ஒத்துழைப்பு, இரு தரப்பு உறவு தொடர்பாக உக்ரைன் மற்றும் நார்வே இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் உக்ரைனில் நவீன போர் டிரோன்களின் உற்பத்திக்கு நார்வே அரசு பல்வேறு உதவிகளை செய்ய இருக்கிறது. நார்வேயிலும் டிரோன்களை தயாரிக்க உக்ரைன் திட்டமிட்டிருக்கிறது.

Related Link
ஹோர்முஸ் நீரிணையை நெருங்கினால் அழிக்கும் படி உத்தரவு

ஹோர்முஸ் நீரிணையை நெருங்கினால் அழிக்கும் படி உத்தரவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வென்றது

4
26 mins agoshare
தவெக அரசு வென்றதுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved