Also Watch
Read this
By: Web Team

கல்குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 6 கிராமங்களின் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லணை, அச்சங்குளம், தூம்பகுளம், டி.புதூர், புதிய நெடுங்குளம் மற்றும் உலகாணி ஆகிய 6 கிராமங்களில் 300 அடிக்கு மேல் ஆழமாக தோண்டி குவாரி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மாணவர்கள் பள்ளி செல்வதை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved