Also Watch
Read this
By: Web Team

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளி வளாகம் மற்றும் திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் வெள்ளக்காடாக மாறியது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வந்த நிலையில், நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதோடு, பாதாள சாக்கடை குழாயிலும் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலந்தது. மேலும், திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், மழைநீர் தேங்கிய நிலையில் மாணவர்களும், ஆசிரியர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved