விழுப்புரத்தில் 3 நாட்களாகியும் வடியாத மழைநீரை வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கம்பன் நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளை சூழ்ந்த வெள்ளநீர் 3 நாட்களாக வடியாததால் பாம்பு போன்ற விஷ பூச்சிகளின் தொல்லை இருப்பதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.