Also Watch
Read this
By: Web Team

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்புமாறு, மாநகராட்சி மேயர் பிரியா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து, மேயர் பிரியா கூறியதாவது:
தூய்மை பணியாளர்கள் தரப்பில், பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். தூய்மை பணியாளர்களுக்கு எப்போதுமே பணி பாதுகாப்பு உண்டு. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
முன் எப்போதும் இல்லாத வகையில், பணியில் பாதுகாப்பு இருக்கிறது. பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் மீண்டும் பணியில் சேர வேண்டும். பிற கோரிக்கைகள் குறித்து ஓரே நாளில் முடிவெடுக்க முடியாது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தும் இடம் சென்னை ரிப்பன் மாளிகை அல்ல. பணிக்கு திரும்புவதற்கு, வரும் 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மேயர் பிரியா தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved