Also Watch
Read this
By: Fyrose Banu

கோயம்பேட்டில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மத்திய அரசு ஜிஎஸ்டி ஆய்வாளரைத் தாக்கி தங்க மோதிரத்தைப் பறித்துச் சென்ற வழக்கில் திருநங்கை ஒருவரைப் போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ஜிஎஸ்டி ஆய்வாளர் சுக்லா பாலாஜி (26) என்பவர் நெசப்பாக்கம் சந்திப்பு அருகே காலை நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது அங்கே வந்த 2 திருநங்கைகள் அவரை மிரட்டி, தாக்கி அவரிடமிருந்த 5 கிராம் எடையுள்ள தங்க மோதிரத்தைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். 
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய கோயம்பேடு போலீசார், இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட கோயம்பேட்டைச் சேர்ந்த திருநங்கை அன்சிகா என்கிற கீர்த்தனா (19) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved