Also Watch
Read this
By: Fyrose Banu

80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் சமபந்தி போஜனத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் பிரகாசம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்திய திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்ற சமபந்தி போஜனம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சமபந்தி போஜனம் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் பிரகாசம் தலைமையில் நடைபெற்றது

ஏழை பணக்காரன் ஜாதி மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் நடைபெறும் இந்த சமபந்தி போஜனத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சாமி தரிசனம் செய்த பின் அனைவருக்கும் உணவு பரிமாறினார்

பின்னர் மக்களோடு மக்களாக அமர்ந்த வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் பிரகாசம் ஆகியோர் உணவு சாப்பிட்டனர் இதனைத் தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும்
வழங்கப்பட்டது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved