Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சோப் வாங்கினால் பரிசு கூப்பன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் தருவதாக கூறி பணம் பறித்த கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மின்னூர், மாதனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு வந்த கும்பல், பரிசு கூப்பன் மூலம் டிவி, ஏர்கூலர் உள்ளிட்ட பொருட்களை தருவதாக கூறி முன்பணமாக 7 ஆயிரத்து 500 ரூபாயை பலரிடம் வசூலித்த தாக கூறப்படுகிறது. ஒருசிலருக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் மின்னூருக்கு வந்த மூன்று பேரை அப்பகுதி மக்கள் பிடித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved