Also Watch
Read this
By: Manigandan Raja

ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பான ஆட்டம்
ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா ஐசிசி தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார். ஐசிசியின் டி20 போட்டிகளில் சிறந்த பேட்டர்களுக்கான தரவரிசையில் 6-வது இடத்திலிருந்த அவர், 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சிறப்பாக விளையாடிய ஷஃபாலி வர்மா, 3 போட்டிகளில் 188 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சதம் விளாசி அசத்திய அவர், இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடி 48 ரன்கள் குவித்தார்.
இலங்கை அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்த இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. "ஏ" பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா, 60 நிமிடத்தில் 16 கோல்கள் அடித்து இலங்கைக்கு எதிராக கோல் மழை பொழிந்தது.

இலங்கை அணியால் ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இந்தியாவின் ஜுக்ராஜ் சிங் அதிகபட்சமாக 4 கோல்கள் அடித்தார். அபிஷேக் மற்றும் தில்ப்ரீத் சிங் தலா 3 கோல்களும், ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களும், விவேக் சாகர் பிரசாத், சுக்ஜீத் சிங், மந்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved