news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஜிஎஸ்டி வரிக்குறைப்பு, நுகர்வோர் கண்ட பலன் என்ன?

ஜிஎஸ்டி பலனை பணவீக்கம் விழுங்கியதா?

32

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி, ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மத்திய அரசு முக்கிய மாற்றங்களை மேற்கொண்டது.

வரி சீரமைப்பு அமல்
பழைய 5%, 12%, 18%, 28% என்ற நான்கு அடுக்கு எளிமைப்படுத்தப்பட்டு, பெரும்பாலான பொருட்கள் 5% மற்றும் 18% என்ற இரண்டு முக்கிய விகிதங்களுக்குள் கொண்டுவரப்பட்டன. ஆடம்பர மற்றும் பாவப் பொருட்களுக்கு (Luxury and Sin Goods) 40% சிறப்பு விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் விரும்பி வாங்கும் பொருட்களின் மீதான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டு, அதன் மூலம் பொருட்களின் விலையைக் குறைப்பது, விற்பனையை அதிகரிப்பது இதன் நோக்கமாகக் கூறப்பட்டது. ஜிஎஸ்டி வரிசீரமைப்பு அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அதன் உண்மையான பலன் நுகர்வோருக்கு எவ்வளவு சென்றடைந்துள்ளது என்பதே தற்போது முக்கியமான கேள்வி?

ஆட்டோமொபைல் துறையில் வேகம்
ஆட்டோமொபைல் துறையில் ஜிஎஸ்டி குறைப்பின் தாக்கம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. ஆகஸ்டுடன் முடிவடைந்த கடந்த 11 மாதங்களில் வாகனங்கள் விற்பனை முந்தைய ஆண்டைவிட 20 சதவீத வளர்ச்சி அடைந்து உள்ளது. வரிக்குறைப்பின் முக்கியமான விளைவுகளில் ஒன்று நுகர்வோரின் தேர்வில் ஏற்பட்ட மாற்றமாகும். முன்பு இருசக்கர வாகனத்தைத் தேர்வு செய்த சில நுகர்வோர், விலை குறைந்ததன் காரணமாக கார்களை நோக்கி நகர்ந்து உள்ளனர்.

பெரிய திரை டிவிகளுக்கு மாறும் நுகர்வோர்
தொலைக்காட்சித் துறையிலும் நுகர்வோர் தேர்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 32 அங்குல திரைகளுக்கு மேற்பட்ட தொலைக்காட்சிகளுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதன் பின்னர் பெரிய திரை மற்றும் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட டிவிகளுக்கான தேவை அதிகரித்தது. நுகர்வோரின் வாங்கும் திறன் உயரும்போது, விற்பனை அதிகரிப்பது மட்டுமல்ல. அவர்கள் முன்பு அணுக முடியாத பொருட்களைத் தேர்வு செய்யத் தொடங்குகிறார்கள். வரிச்சலுகையால் கிடைக்கும் பணத்தைப் பயன்படுத்தி அதிக அளவு, அதிக தொழில்நுட்பம் கொண்ட பொருட்களைத் தேர்வு செய்துள்ளனர் என்பதை தரவுகள் காட்டுகின்றன.

FMCGல் ஆரம்ப வளர்ச்சி
அன்றாட நுகர்வுப் பொருட்கள் எனப்படும் FMCG துறையிலும் ஜிஎஸ்டி குறைப்பின் ஆரம்பகால தாக்கம் நேர்மறையாக இருந்தது. ஆனால் இந்த வளர்ச்சி தொடர்ந்து நீடிக்கவில்லை. அதிகரித்த உற்பத்திச் செலவுகளை ஈடுகட்ட நிறுவனங்கள் பொருட்களின் விலையை உயர்த்தத் தொடங்கின. அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12 அல்லது 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டபோது, ஆரம்பத்தில் சராசரியாக 10 சதவீதம் வரை விலை குறைந்தது. பின்னர் மூலப்பொருள், எரிசக்தி மற்றும் தளவாடச் செலவுகளை சமாளிக்க நிறுவனங்கள் 6–7 சதவீதம் வரை விலையை உயர்த்தியுள்ளன. விலை குறைந்ததன் மூலம் நுகர்வோருக்கு கிடைத்த உண்மையான நன்மை 10 சதவீதம் அல்ல, தற்போது 2–3 சதவீதம் அளவுக்கு மட்டுமே இருப்பதாக தரவுகள் காட்டுகின்றன.

ஆடைத் துறைக்கு மாறுபட்ட நிலை
ஜிஎஸ்டி மாற்றத்தால் அனைத்து துறைகளும் ஒரே மாதிரியான பலனைப் பெறவில்லை. ₹2,500க்கு மேல் விலை கொண்ட ஆடைகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்ந்தது.

இதனால் பண்டிகை மற்றும் விசேஷ நிகழ்வுகளுக்கான ஆடைகள் விற்பனை பாதிக்கப்பட்டது. இந்த பண்டிகைக் காலத்தில் ஆடைச் செலவுகள் 8–10 சதவீதம் வரை உயரும் என தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஹோட்டல் துறையில் எதிர்பாராத விளைவு
நடுத்தர ஹோட்டல்களிலும் ஜிஎஸ்டி மாற்றம் எதிர்பாராத விளைவை ஏற்படுத்தியுள்ளது. இன்புட் டாக்ஸ் கிரெடிட் வசதியுடன் இருந்த 12 சதவீத ஜிஎஸ்டியிலிருந்து, அந்த வசதி இல்லாத 5 சதவீத ஜிஎஸ்டிக்கு அவை மாற்றப்பட்டன. அதாவது முன்பு நடுத்தர ஹோட்டல்கள் 12% GST வசூலித்தன. ஆனால் அதற்கு பதிலாக ஹோட்டல் வாங்கும் பொருட்கள், சேவைகளுக்கு செலுத்திய GST-ஐ Input Tax Credit (ITC) ஆகக் கழித்துக்கொள்ளும் வசதி இருந்தது. புதிய முறையில் GST 12%-லிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டது. ஆனால் Input Tax Credit வசதி நீக்கப்பட்டது. இதனால் முக்கியமான மூலப்பொருட்களுக்கு செலுத்தப்படும் அதிக வரியை ஈடுகட்ட முடியாமல் நடுத்தர ஹோட்டல்களின் லாப வரம்பு சுருங்கியுள்ளது.

ஜிஎஸ்டி பலனை பணவீக்கம் விழுங்கியதா?
ஜிஎஸ்டி குறைப்பின் நோக்கம் நுகர்வோரின் வரிச்சுமையை குறைத்து, பொருட்களின் விலையை குறைத்து, நுகர்வை அதிகரிப்பதாக இருந்தது. ஆனால் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்தால், வரிக்குறைப்பால் கிடைத்த நன்மை படிப்படியாக மறைந்து விடுகிறது. அதாவது, ஒரு புறம் அரசு வரியைக் குறைக்கிறது, மறுபுறம் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. இந்த இரு மாற்றங்களும் ஒன்றையொன்று ஈடுகட்டும்போது, நுகர்வோருக்கான இறுதி பலன் குறைகிறது. ஜிஎஸ்டி குறைப்பின் பலன்களை பணவீக்கம் பறித்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

விலைவாசி உயர்வு
ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டு ஓராண்டு கடந்துள்ள நிலையில், அதன் தாக்கம் நுகர்வோர் சந்தையில் கலவையான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக தரவுகள் காட்டுகின்றன. குறிப்பாக வாகனங்கள், தொலைக்காட்சிகள் விவகாரத்தில் மற்றும் நுகர்வோர் பொருட்களில் மக்கள் அதிக விலை கொண்ட, மேம்பட்ட தரத்திலான பொருட்களைத் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளனர். அதேசமயம், ஜிஎஸ்டி குறைப்பால் கிடைத்த நன்மைகளை அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு தட்டிப் பறித்துள்ளது.

Related Link
100 விழுக்காடு வரி - இந்தியா எச்சரிக்கை, அமெரிக்க உறவில் விரிசல்?

100 விழுக்காடு வரி - இந்தியா எச்சரிக்கை, அமெரிக்க உறவில் விரிசல்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

50 ஆண்டுகால இசை பயணம், இசைஞானிக்கு கவுரவம்

26
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved