news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

மின்வாரிய தலைமையகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு

சீரமைப்பு பணிகளை துரிதமாக செய்கிறோம்

31

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். மின் உற்பத்தி, விநியோகம், மின் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு, தொடரும் மின்வெட்டு புகார்களை அடுத்து நேரில் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

மின்பற்றாக்குறை
மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு செய்த பிறகு, அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது;
இந்தியா முழுவதுமே மின்சாரப் பற்றாக்குறை இருக்கத்தான் செய்கிறது. நமக்கு துணை மின் நிலையங்கள் பற்றாக்குறையும் இருக்கிறது. நிறைய இடங்களில் கூடுதல் அழுத்தம் தாங்க முடியாமல் மின்மாற்றிகள் தீப்பற்றி எரிகின்றன. வரும் காலங்களில் இவை சரி செய்யப்படும். மின் தேவைகளை பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

600 துணை மின் நிலையங்கள்
திமுக ஆட்சியில் மின்மாற்றிகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. 6 ஆயிரம் மின்மாற்றிகளை சீரமைக்க வேண்டி உள்ளது. தமிழகத்துக்கு உடனடியாக 600 துணை மின் நிலையங்கள் தேவைப்படுகிறது.

மின்வாரியத்துக்கு 10,000 பணியாளர்கள் நியமிக்கப்படுவர். சீரமைப்பு பணிகளை துரிதமாக செய்கிறோம். வரவிருக்கும், கோடை மின் தேவையை சமாளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. காற்றாலை மின் உற்பத்தி குறைவுவாக உள்ளது. மின்பாதிப்புகளை சரிசெய்ய அதிகாரிகளுக்கு, மக்களும் அவகாசம் தர வேண்டும்.
இவ்வாறு நிர்மல்குமார் தெரிவித்தார்.

Related Link
மின்சாரத்துக்காக உயிரைப் பறிப்பதா? நச்சுப் புகையில் துடிக்கும் வடசென்னை

மின்சாரத்துக்காக உயிரைப் பறிப்பதா? நச்சுப் புகையில் துடிக்கும் வடசென்னை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஊக்கத் தொகை ரூ.75 லட்சம் அறிவித்த முதலமைச்சர்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved