news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நாதக வேட்பாளர் சவுந்தர்யாவை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை
tv

Also Watch

tv

Read this

நாதக வேட்பாளர் சவுந்தர்யாவை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை

பவானி சாகர், ஈரோடு

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சீமான் ஈரோடு  பிரச்சாரம்

சீமான் தேர்தல் பரப்புரை :

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் செவிலியர் சௌந்தர்யாவை ஆதரித்து நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

இதில் சீமான் பேசும்போது 8000 ரூபாய் கூப்பனை கொடுத்தால் உங்கள் மானத்தை திருப்பி வாங்க முடியுமா, மதுவால் ஆன கடனை அடைக்க முடியுமா, எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் எடப்பாடி ஆட்சியில் இருக்கும் பொழுது 4 லட்சம் கோடி கடன் என்றும் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 10 இலட்சம் கோடியாக கடன் உயர்ந்துள்ளது எனவும் 5 லட்சம் கோடி கடன் வாங்கி என்ன செய்தார்கள் எனவும்.

தரமான கல்வி, இலவச மருத்துவம் வழங்கினார்களா 5 லட்சம் கோடியால் நாட்டை சொர்ங்கமாக மாற்ற முடியாதா என பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் 30 கோடி முதலீடு செய்து 30 ஆயிரம் கோடி சம்பாதிக்கின்றனர்.

நோட்டுக்கு வாக்கு நாட்டுக்கு வேட்டு. மக்கள் மனதில் புரட்சி வேண்டும் என தெரிவித்த அவர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், விஜய் அடுத்து நான். இவர்களில் நல்லவர்கள் யார் என்று நீங்கள் உணர வேண்டும் எனவும் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்று தெரியாதா எனவும் பேசிய அவர்.

உங்களால் யோசிக்க முடியாதா எனவும் மக்களிடையே கேள்வி எழுப்பினார். இந்த தேர்தல் மாறுதலுக்கு மாற்றத்திற்கான தேர்தலா ஒரு முறை எங்கள் ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள். தலைசிறந்த நாடாக மாறும்.

மாற்றுவோம் என தெரிவித்த அவர் உங்கள் ஒற்றை வாக்கால் உலகை மாற்ற முடியும். விவசாயிக்கு வாக்களியுங்கள் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். பரப்புரை கூட்டத்தில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Link
பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை

பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

10
16 hrs 10 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved