news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அம்பத்தூரில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை.!
tv

Also Watch

அம்பத்தூரில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை.!

கொரட்டூர்

1

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
amb

சென்னை அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் ஜெகநாதன் தலைமையிலான தனிப்படையினர் கொரட்டூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சென்ட்ரலில் இருந்து கொரட்டூர் ரயில் நிலையத்திற்கு வந்த 3 இளைஞர்கள்,போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனர்.அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார்,அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

சோதனையில் பண்டல் பண்டலாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா இருப்பது தெரியவந்தது.விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (24), தனபால் (29),விஷால் (29) என்பது தெரியவந்தது.மேலும்,ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து,அம்பத்தூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்ய முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து,3 பேரையும் கைது செய்த போலீசார்,அவர்களிடமிருந்து சுமார் 1.5 லட்சம் மதிப்புள்ள 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இரண்டு நாட்கள் தடை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved