news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews TVK கொடியை பயன்படுத்தி பாலியல் அத்துமீறல்? கைது
tv

Also Watch

TVK கொடியை பயன்படுத்தி பாலியல் அத்துமீறல்? கைது

REELS வீடியோ பின்னால் இவ்வளவு அபத்தமா?

42

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஈரோடு அருகே சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மோகம், அரசியல் பிரமுகர்களுடன் போட்டோக்கள் என தன்னை ஒரு பெரிய விஐபியாக காட்டி கொண்ட ரியல் எஸ்டேட் அதிபர், தனது அலுவலகத்தில் வேலை பார்த்த இளம்பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ரீல்ஸ் பதிவிடும் ரியல் எஸ்டேட்காரர்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். 33 வயதான இவர், அப்பகுதியில் வி.கே. புரோமோட்டர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வந்து உள்ளார். கெம்பநாயக்கன்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு பகுதிகளில் கிளைகளை தொடங்கியுள்ளதாக கூறி வந்த வெற்றிவேல், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குறைந்த விலைக்கு தோட்டம், வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரீல்ஸ்களை பதிவிட்டு மக்களை ஈர்த்து வந்திருக்கிறார்.

இளம்பெண்ணிடம் அத்துமீறல்
கோத்தகிரி, ஊட்டி, மேட்டுப்பாளையம் என பல இடங்களிலும் கிளைகள் உள்ளதாக கூறி, அங்கு இளைஞர்களை பணிக்கு அமர்த்தி கமிஷன் அடிப்படையில், வீடு மற்றும் நிலங்களை விற்று வந்துள்ளார் வெற்றிவேல்.
இந்த அலுவலகத்தில்தான் இளம்பெண் ஒருவர் கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் அலுவலகத்தில் பணியில் இருந்த அவரிடம், ஒரு டாக்குமெண்ட் எடுத்து கொடுக்க வேண்டும், உடனடியாக வாருங்கள் என்று கூறி அவரை தனியாக வரவழைத்துள்ளார் உரிமையாளர் வெற்றிவேல். அங்கு வந்த பெண்ணிடம், பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார் வெற்றிவேல். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

உறவினர் பெண்ணின் அதிரடி
அப்போது, அவரை வழிமறித்த வெற்றிவேல், ’இதைப்பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் உனது குடும்பத்தை சும்மா விடமாட்டேன்,’ என்று கூறி மிரட்டல் விடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார். உயிருக்கு பயந்த இளம்பெண், வெளியில் சொல்ல முடியாமல் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார். இதனிடையே, இளம்பெண்ணின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை கண்ட அவரது உறவினர் பெண் ஒருவர், அவரிடம் விசாரித்தபோது, தாங்க முடியாத வேதனையுடன் அழுதுகொண்டே தனக்கு நடந்த பாலியல் கொடூரத்தை விவரித்திருக்கிறார். இதை கேட்டு ஆவேசமடைந்த அவரது உறவினர், நியாயம் கேட்க துணிந்து நேராக கெம்பநாயக்கன்பாளையத்தில் உள்ள வெற்றிவேலின் அலுவலகத்திற்கே சென்று தட்டிக்கேட்டுள்ளார்.

வழக்குப்பதிவு, கைது
இதனால், ஆத்திரமடைந்த வெற்றிவேல், தனது மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதற்கு பதிலாக, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, பலமாக தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட தரப்பினர் உடனடியாக பங்களாபுதூர் காவல் நிலையத்தில் சென்று புகாரளித்தனர்.

அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ரியல் எஸ்டேட் அதிபர் வெற்றிவேலை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையிலும், சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையிலும், டிஎஸ்பி முத்தரசு மேற்பார்வையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்த பங்களாபுதூர் காவல்துறையினர், அவரை சிறையில் தள்ளியுள்ளனர்.

தவெக கட்சிக்கொடி காட்டி...
கைது செய்யப்பட்டுள்ள வெற்றிவேல், தான் தவெகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறி திரிந்துள்ளதுடன், அரசியல் பிரமுகர்களுடனும் வலம் வந்துள்ளார்.

குறிப்பாக, தனது ஜீப்பில் தவெக கட்சி கொடியை கட்டிக்கொண்டு, தனது தம்பியுடன் சென்று முக்கிய பிரமுகர்களுக்கு பொன்னாடை போர்த்தி, அந்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பதிவிட்டு தன்னை ஒரு செல்வாக்கு மிக்க நபராக காட்டி கொள்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இனம் கண்டு ஒடுக்க வேண்டும்
இப்படி சமூக வலைதளங்களை நம்பவைத்து மைலேஜ் தேட முயன்ற இவரின் இந்த அயோக்கியத்தனம், தற்போது கட்சியினர் மத்தியிலும், மக்களிடையேயும் அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது. அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற போலி முகமூடிதாரிகளை சட்டமும், மக்களும் உரிய நேரத்தில் இனம் கண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த குரலாக உள்ளது.

Related Link

"நாங்கள் இருக்கிறோம், பாத்துக்குறோம்" என Buildup விட்ட லெப்ட் பாண்டி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"மக்களால் உருவாக்கப்பட்டவன் நான்" என CM விஜய் பாணியில் பேசிய SK

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved