news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "சண்முகா டீ ஸ்டால், இனி முதலமைச்சர் டீக்கடை"
tv

Also Watch

"சண்முகா டீ ஸ்டால், இனி முதலமைச்சர் டீக்கடை"

CM விஜய் டீ குடித்த டம்ளருக்கு இப்படி ஒரு மரியாதையா?

33

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுராந்தகம் இடைத்தேர்தலின்போது, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் விஜய், வழக்கம்போல் வாகனத்தில் மட்டும் வலம் வராமல், ஒரு தேநீர் கடையில் அமர்ந்து மக்களுடன் மக்களாக, டீ குடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தற்போது, அவர் டீ குடித்த டம்ளரை தனது வீட்டு பூஜை அறையில் பத்திரமாக வைத்து பூஜை செய்து வருவதாக கடை உரிமையாளர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில்...
கடந்த கால தேர்தல் பிரச்சாரங்களின்போது, விஜய் வழக்கமாக பின்பற்றிய முறை என்பது வேறு. பெரும்பாலும் வேன் மீது நின்றுகொண்டு பேசுவது, சில தருணங்களில் சைக்கிள் ஓட்டுவது போன்ற நடவடிக்கைகளோடு அவரது பிரச்சாரம் சுருங்கிவிடும். கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வியலோடு நேரடியாக தொடர்புகொள்ளும் டீக்கடைகளில் தேநீர் அருந்துவது, மாட்டு வண்டி அல்லது டிராக்டர் ஸ்டியரிங்கை திருப்புவது போன்ற வழக்கமான கிராமிய அரசியலை அவர் முன்பு பெரியளவில் மேற்கொண்டது கிடையாது. ஆனால், சமீபத்திய இடைதேர்தல் களத்தில் இந்த வியூகம் முற்றிலும் தலைகீழாக மாறியது.

புதிய கள உத்திகள்
சாலைகளில் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்துவது, கிராமம் கிராமமாக தொடர்ச்சியாக சென்று பொதுமக்களை நேரில் சந்திப்பது, ரோட்டோர தேநீர் கடைகளில் அமர்ந்து டீ குடிப்பது, மாட்டு வண்டி ஓட்டுவது என பல புதிய கள உத்திகளை அவர் கையாண்டுள்ளார்.

தேநீர் கடையில்...
இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, மதுராந்தகத்தில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் விஜய், அங்கிருந்த தேநீர் கடை ஒன்றுக்கு திடீரென விசிட் அடித்தார். இந்த எதிர்பாராத சந்திப்பு கடை உரிமையாளருக்கும், அப்பகுதி மக்களிடையும் ஆச்சரியத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

வீட்டு பூஜை அறையில்...
இந்த விசிட் குறித்து பேசிய டீக்கடை உரிமையாளர், முதலமைச்சர் விஜய் தனது கடைக்கு வந்து தேநீர் அருந்தி சென்ற பிறகு கடையில் வியாபாரம் அதிகரித்து உள்ளதாகவும், ஊர் மக்கள் பலரும் ஆர்வத்துடன் தினமும் கடைக்கு வந்து செல்வதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், அவர் டீ குடித்த டம்ளரை பாதுகாப்பாக தனது வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதல்வர் டீக்கடை
தனது கடையின் பெயரையே சண்முகா டீ ஸ்டால்ஸ் என்பதில் இருந்து முதலமைச்சர் டீக்கடை என மாற்றப்போவதாக கூறிய கடை உரிமையாளர், முதல்வர் அமர்ந்த இடத்தில்கூட பலரும் வந்து ஆர்வத்துடன் அமர்ந்து புகைப்படங்களை எடுத்து கொண்டு செல்வதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

எத்தனை கோடி கொடுத்தாலும்...
இதற்கிடையே, டீக்கடைக்காரரின் மகன் விஸ்வா, இந்த சந்திப்பு குறித்து பேசும்போது மிகுந்த உணர்ச்சியுடன் சிலிர்த்து போனார். நான் முதலமைச்சர் விஜய்யை தேடிச் சென்றேன், ஆனால், அவரோ எங்கள் கடைக்கே வந்திருக்கிறார் என்று குறிப்பிட்ட அவர், எங்கள் கடைக்கு வந்த முதல்வரை நேரில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் அன்று இரவு நான் உணவு சாப்பிடவே இல்லை என்று தனது ஏக்கத்தை கொட்டினார். மேலும், எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த மகிழ்ச்சி தங்களுக்கு கிடைக்காது என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Related Link
முதல்வர் விஜய் பாதுகாப்பு குறித்து வந்த அவசர ’அலர்ட்’

முதல்வர் விஜய் பாதுகாப்பு குறித்து வந்த அவசர ’அலர்ட்’


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரசவம் இலவசம், ஏமாந்த ஏழைத்தாய்

39
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved