Also Watch
Read this
By: Manigandan Raja

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் ஏராளமான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்தும், கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அறுவடை செய்த நெல் மணிகளை கொள்முதல் நிலையங்களில் அதிகரிக்கும் சாக்குகள் தட்டுப்பாட்டால் சாலைகளிலும், வயல்வெளிகளிலும் கொட்டி வைத்து விவசாயிகள் நாள் கணக்கில் காத்துள்ளனர். மேலும் பாபநாசம் சுற்று வட்டார கிராம பகுதிகளில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
அதிகபட்ச நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்த வெளியில் அமைந்துள்ளதால் அவ்வப்போது பெய்து வரும் மழையினாலும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், தேங்கி கிடக்கும் நெல்களை உடனடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.