news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோயில் ஆனி விழா விமரிசை
tv

Also Watch

tv

Read this

சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோயில் ஆனி விழா விமரிசை

சிந்தலக்கரை, தூத்துக்குடி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சிந்தலக்கரை வெட்காளியம்மன்

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை ஸ்ரீ வெட்காளியம்மன் காளிபராசக்தி வசித்த பீடத்தில் ஆனி மாத வேள்வி பூஜை சக்தி மாலை இருமுடி விழா மகாயாகம் நடைபெற்றது.வேள்வி விழா மகாயாக சாலையில் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பழ வகைகள்,உணவு தானியங்கள், உடைகள்,குழந்தை தொட்டில், கல்உரல், அம்மி,மாங்கல்யம், உணவு ஆகியவற்றை நடைபெற்ற மகாயாக
சாலையில் செலுத்தி வழிபாடு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 42 அடி உயரம் கொண்ட வெட்காளியம்மனுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் மற்றும் 180கிலோ எலுமிச்சம் மாலை அணிவித்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

ஆனி மாத இருமுடி விழாவிற்கு வருட வருடம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதால், இன்று 4-வது கட்டமாக தர்மபுரி,சேலம்,நாமக்கல்,கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட விரதம் இருந்து காப்பு கட்டி இருமுடி கட்டியும் வெட்காளியம்மன் வேடம் அணிந்தும் வந்த பக்தர்கள் பம்பை வாத்தியத்துடன் ஆரவார நடனத்துடன் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Related Link
அசுர வேகத்தில் சென்ற தனியார் பேருந்து

அசுர வேகத்தில் சென்ற தனியார் பேருந்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாலை சேதமடைவதால் லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்

0
7 mins agoshare
லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau