Also Watch
Read this
By: Manigandan Raja

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவிலிருந்து உசிலம்பட்டிக்கு செல்லும் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் அதி வேகத்தில் செல்வதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்
வத்தலகுண்டில் இருந்து உசிலம்பட்டி வரையிலான பேருந்து வழித்தடத்தில் சின்னுபட்டி, கண்ணாபட்டி, செக்காபட்டி, விருவீடு, உத்தப்ப நாயக்கனூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில தனியார் பேருந்துகள் நேரத்தை முறையாக கடை பிடிக்காமல் இயக்கப்படுகின்றனர்.
இதனால் சாலையில் அதிக வேகத்தில் பேருந்தை இயக்கி பயணிகளை அச்சத்திற்கு ஆளாக்கி வருகின்றனர் இந்நிலையில் உசிலம்பட்டிக்கு பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து அதிவேகத்தில் சென்றதால் அதில் பயணம் செய்த பயணிகளுக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பயணிகளின் கூச்சலை காதில் வாங்காமல் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அலட்சியமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த காணொளி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனை தொடர்ந்து அதிக வேகமாக செல்லும் தனியார் பேருந்துகளை தமிழக அரசு கட்டுப்படுத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.