Also Watch
Read this
By: Manigandan Raja

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் புலி சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசிக்கின்றன. கடந்த சில மாதங்களாக தாளவாடி வனச்சரகத்தில் உள்ள சிறுத்தைகள் அவ்வப்போது இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி அருகே சூசையபுரம் பிரிவு பகுதியில் உள்ள டென்னிஸ் என்பவரது வீட்டு வளாகத்துக்குள் நேற்று இரவு புகுந்த சிறுத்தை ஒன்று காம்பவுண்ட் சுவரில் நடந்தவாறு உள்ளே குதித்து வளர்ப்பு நாயை வேட்டையாடி தூக்கி சென்றது.

இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.