Also Watch
Read this
By: Manigandan Raja

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள பனையூர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் இவரது மகன் அஜய் தேவகுமாரன் 19 வயதான அஜய் தேவகுமாரன் கோயம்புத்தூரில் உள்ள சங்கரா கல்லூரியில் கேட்டரிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
மூன்று நாள் விடுமுறைக்கு பின்பு நேற்று கல்லூரி செல்வதற்காக தனது கிராமத்திலிருந்து தனியார் பேருந்து மூலம் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார் அப்போது வட்டக்கோவில் பகுதி அருகே அரசு பேருந்தில் ஏறிய திருநங்கை ஒருவர் பேருந்தில் இருந்த பலரிடம் செல்போனை கேட்டுள்ளார் அப்போது பேருந்தில் இருந்த கல்லூரி மாணவர் அஜய் தேவகுமாரன் மற்றும் அவருடன் வந்த அவரது நண்பர் செல்போனை கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதில் அஜய் தேவகுமாரன் செல்போனை தர மறுத்ததை தொடர்ந்து சத்தமிட்டபடியே திருநங்கை வந்துள்ளார் இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் பேருந்து வந்து அடைந்தது பேருந்தில் இருந்து இறங்கிய அஜய் தேவகுமாரன் மற்றும் அவரது கல்லூரியில் படிக்கும் சக நண்பரான முதலாம் ஆண்டு மாணவர் ஆகிய இருவரும் கோயம்புத்தூர் செல்வதற்காக தனியார் ஆம்னி பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளனர்.

அங்கேயும் வந்த திருநங்கை அஜய் தேவகுமாரன் இருக்கைக்கு பின்னால் அமர்ந்து கொண்டு அவரது கழுத்தை திடீரென பிடித்து நெறித்தத்துடன் அவரிடம் செல்போனை கேட்டு மிரட்டி உள்ளார். இதற்கு அஜய் தேவகுமாரன் மறுக்கவே உடனடியாக திருநங்கைதான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து அஜய் தேவகுமாரனை கழுத்து மற்றும் முகம் உடலில் கை உள்ளிட்ட பல்வேறு பாகங்களில் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டார்.
தொடர்ந்து ரத்த காயங்களுடன் இருந்த அஜய் தேவகுமாரன் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் தொடர்பாக வடபாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய திருநங்கையை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் திருநங்கை ஒருவர் கல்லூரி மாணவரிடம் செல்போனை கேட்ட தராததால் கத்தியால் தாக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் திருநங்கைகள் தொடர்ந்து இதுபோன்று பணம் பறிக்கும் நோக்கில் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.