news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலை சேதமடைவதால் லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்
tv

Also Watch

tv

Read this

சாலை சேதமடைவதால் லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்

கனகம்மா சத்திரம், திருவள்ளூர்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்ததன் முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கிய சவுண்டு குவாரிகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் சாலை பணிகளுக்காக பயன்படுத்தப்படும் சவுண்டு மண் அள்ளும் பணிகள் முற்றிலுமாக தடைபட்டுள்ளது,

மேலும் திருவள்ளூர்  மாவட்டத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மண் இல்லாமல் ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக விலைக்கு மண் வாங்கும் நிலைக்கு மாவட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆந்திர மாநில குவாரி உரிமையாளர்கள் தமிழ்நாடு ஒட்டிய பகுதிகளில் குவாரி அமைத்து அதிக விலைக்கு மண்ணை விற்று வருகின்றனர்.

லாரிகள் ஓடாமல் அதன் மாதாந்திர தவணையை கட்ட முடியாமல் தவித்து வந்த லாரி உரிமையாளர்கள் குறைந்த லாபத்திற்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக விலை கொடுத்து மண்ணை ஏற்றி வந்து விற்பனை செய்து வருகின்றனர். 


இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் மண்ணை ஏற்றி தமிழக எல்லை கனகம்மாசத்திரம் கிராமப் பகுதியில் வரும் லாரிகள் சாலைகளை சேதப்படுத்துவதாகவும் இதனால் விபத்துக்கள் ஏற்படுவதால் லாரிகளை இந்த வழியில் இயக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், கனகம்மாசத்திரம் காவல் நிலைய போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து செய்ய அறிவுறுத்தினர்.

Related Link
பள்ளிக்கு சென்ற ஆசிரியையிடம் 10 பவுன் தங்க நகை பறிப்பு

பள்ளிக்கு சென்ற ஆசிரியையிடம் 10 பவுன் தங்க நகை பறிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாலை சேதமடைவதால் லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்

3
1 hr 4 mins agoshare
லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau