Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த ரெக்க கார்த்தி என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் அவரின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. இதற்காக அவரது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவரையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச் சென்றனர்.
அப்போது அரசு ராஜாஜி மருத்துவமனை தொடங்கி வைகையாற்று கரையோரம் இல்ல வடகரை சாலை வரை இறந்துபோன ரெக்க கார்த்தியின் நண்பாஸ் அனைவரும் தங்களது பைக்குகளை முறுக்கியபடி, ஒரே பைக்கில் மூன்றுபேர் வீலிங் என சாலையில் நடுவே அட்ராசிட்டியில் ஈடுபட தொடங்கினர்.
இதனை காவல்துறையினர் நின்றபடி வேடிக்கை பார்க்கும்போதே ரெக்க கார்த்தியின் நண்பாஸ் பைக்குகளில் றெக்ககட்டி பறந்தபடி பைக்ரேஸில் ஈடுபட தொடங்கினா். பிரதான சாலையில் 100க்கும் மேற்பட்ட பைக்குகளில் சாகசங்களில் ஈடுபட்டபடி உறுத்தானவன் போயிட்டான் என கூறியபடி துணைக்கு போவது போல ரிஸ்க் எடுத்து பைக்குகளில் ஏறி குதித்து சாகசங்களில் ஈடுபட்டனர்.

இதனால் பைக்குகளில் பள்ளி முடிந்து சென்ற மாணவிகள், பள்ளி வாகனத்தில் வந்த வாகன மாணாக்கர்கள் என. அனைவரும் அச்சத்திற்கு ஆளாகினர். பைக் ஊர்வலத்தால் வடகரை சாலை முழுவதிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
இறுதிச் சடங்கின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையின் அறிவிப்பு வெற்று அறிவிப்பு என்பது போல முடிந்தால் எங்களை தொட்டுப்பார் என பொதுமக்களையும் காவல்துறையினரையும் எச்சரிக்கும் வகையிலும் ரெக்க கார்த்தியின் நண்பாஸ் செய்த சேட்டையால் சாலையில் சென்ற பொது மக்கள் அச்சத்தோடு கடந்து செல்லும் நிலை உருவானது
மறைந்த நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் போது கண்ணியமான முறையில் நடந்து கொள்ள வேண்டிய நண்பர்கள் பைக்குகளில் அட்ராசிட்டி செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது தான் நீங்கள் நண்பனுக்கு அளிக்கும் மரியாதையா ? என ஒவ்வொருவரும் கேள்வி எழுப்பியபடி சென்றனர்.
இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு அதிகளவு வாகனங்களை அனுமதித்து போக்குவரத்து விதிகளை மீறி அட்ராசிட்டியில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறையினர் கண்டு கொள்வதே இல்லை எனவும் எப்படியோ எங்க காவல்நிலைய எல்கை பகுதியில் இருந்து அவர்கள் வெளியேறினால் போதும் என நினைத்து வெளியேற்றிய பின்பு அவர்கள் சாலையில் என்ன செய்தால் என்ன என கண்டுகொள்ளாததன் அலட்சியமே இதுபோன்று தொடர்கதையாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நியூஸ் தமிழ் எதிரொலி :
மதுரையில் விக்கிரமங் குலத்தை சேர்ந்த ரெக்கை கார்த்திக் இறுதி சடங்கில் பைக்குகளில் ரெக்க கட்டி பறந்து பைக் ஊர்வலம் நடத்திய வர்கள்மீது பொதுமக்களுக்கு போக்குவரத்தும் இடையூரு ஏற்படுத்தும் வகையில் மதுபோதையில் இரு சக்கர வாகனங்களில் அதி வேகமாக இயக்கிய விக்கிரமங்குலத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் மீது செல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு.